செஃப்லீரா ரோஸ்ட்ரேட்டா (Wt.) Harms ரகம் மைக்ராந்தா (Cl.) Mahesh. - ஆரல்லியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் இயல்பு வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் இயல்பு :

வளரியல்பு : சிறிய மரங்கள், 8மீ. உயரம் வரை வளரக்கூடியது.
இலைகள் : இலைகள் கைவடிவகூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, இலையடிச்செதில் இலைக்காம்புடன் ஒட்டியவாறு காணப்படுபவை; இலைக்காம்பு 1.3-2.5 செ.மீ. நீளமானது; ஒர் கூட்டிலையில் 6 சிற்றிலைகளுடையது, சிற்றிலையின் அலகு 9-14 X 4-5.5 செ.மீ., ஈட்டி வடிவம் அல்லது நீள்சதுர-ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின்_தளம் கூரியது அல்லது சமமற்றது, சார்ட்டேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; விளிம்பில் மடிப்பு வளையம் போல் ஒன்றோடொன்று இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரிகள் தண்டின் பக்கவாட்டில் காணப்படுபவை; மலர்கள் அம்பல் 1.3 செ.மீ. குறுக்களவுடையது, பேனிக்கிள் போல் அமைந்தவை.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்); விதைகள் தட்டையானது

வாழியல்வு :

மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் அதிகம் காணப்படுகின்றன, குறிப்பாக 1400 மீ. மேலுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகின்றன-குறிப்பாக நீலகிரியில் மட்டும்.

சான்று ஏடு :

Bull. Bot. Surv. India 2 376. 1960; Gamble, Fl. Madras 1 569.1997 (re.ed).

Top of the Page