பப்போவியா பெடோமியானா J. Hk. & Thoms. - அனோனேசி

இணையான பெயர் : பாபோவியா ராமோசிசிமா Bedd.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : குத்துச்செடி முதல் சிறிய மரம், 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : பக்கக்கிளைகள் ஆங்கில எழுத்து Z வடிவத்தில் கிளைத்தது, புதிய கிளைகளில் பொன் நிறமான அடர்த்தியான மென்உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.1-0.2 செ.மீ, நீளமானது, வளையமானது; இலை அலகு 4-8 X 1.5-2.5 செ.மீ. நீள்சதுரம் ஈட்டிவடிவம், அலகின் நுனி கூரியது முதல் சீராக அதிக்கூரியது, அலகின் தளம் கூர்மையானது முதல் வட்டமானது, சார்ட்டேசியஸ், இலையின் கீழ்பரப்பு சொரசொரப்பானது; மையநரம்பு மற்றும் இரண்டாம் நிலை நரம்புகள் மேற்பரப்பில் பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-6 ஜோடிகள், நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் பக்கவாட்டில் இலைக்கோணங்களுக்கு சற்று மேல் அமைந்தது, அல்லது இலைக்கு எதிரானது.
கனி / விதை : கொத்தான 1 விதை கொண்ட முழுச்சதைகனி (பெர்ரி), கோள வடிவம் அல்லது வட்டவடிவம்.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கீழ்மட்ட அடுக்கு மரமாக (அன்டர்ஸ்டோரி), கடல் மட்டத்திலிருந்து 700 மீ. முதல் 1300 மீ. வரை உயரம் உள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் (என்டமிக்) தெற்கு சயாத்திரியில் உள்ள அகஸ்த்திய மலைகளில் காணப்படும்.

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

Hooker, Fl. Brit. Ind. 1: 68. 1872; Gamble, Fl. Madras 1: 17. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 20. 2004.

Top of the Page