பாலிசியாஸ் அக்மீனேட்டா (Wt.) Seem. - ஆரல்லியேசி

இணையான பெயர் : ஹெட்ரா அக்மீனேட்டா Wt.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறு மரம், 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் கூட்டிலை, சிறகுவடிவக்கூட்டிலைகள் (பின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, இலையடிச்செதிலுடையது; சிற்றிலைகள் 8-11, சிற்றிலையின் அலகு 7-10 X 3-4 செ.மீ. முட்டை-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது மற்றும் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது,கோரியேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் கிட்டதட்ட 10 ஜோடிகள், மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் அகலமான வலைப்பின்னலுடையது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பேனிக்கிள்டு அம்பல்; மலர்கள் பச்சை நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), 5 கோணங்களுடையது, கிட்டதட்ட கோளவடிவானது, பைரின் 5-8; விதைகள் தட்டையானது

வாழியல்வு :

அரிதாக உயரமான மலைகளில் காணப்படும், பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1500-1800 மீ. வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - நீலகிரி, ஆனைமலை மற்றும் அகஸ்த்திய மலை.

சான்று ஏடு :

J. Bot. London 3: 181. 1865; Gamble, Fl. Madras 1: 568. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 206. 2004.

Top of the Page