English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | சிறிய மரம் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 7-10 x 4.5-5 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மெட்டையானது, அலகின் தளம் சிறிய இதய வடிவானது மற்றும் சமமற்றது, அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய இணையான அகன்ற பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, தனித்தவை அல்லது ரெசீம் வகை மஞ்சரி, 1-2 செ.மீ. நீளமானது; மலர்கள் காம்பற்றது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), உருளை வடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, 1.1 செ.மீ. நீளமானது. |