English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | சிறிய மரம் |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.4-1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை_அலகு 3-6 x 2-3.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் மெட்டையானது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது மற்றும் பின்புறம் வளைந்து காணப்படும், கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7 ஜோடிகள், ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, குட்டையான ரெசீம் வகை மஞ்சரி, 2.5 செ.மீ. நீளமானது; மலர்காம்பு 0.2 செ.மீ. நீளமானது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), முட்டை வடிவானது. |