போட்டினியா இண்டகிரிபோலியா Lindl. ரகம் செரோட்டிபோலியா Miq.

இணையான பெயர் : க்கொரட்க்ஸ் செரோட்டிபோலியா Desf.; போட்டினியா லிண்ட்லியானா Wt. & Arn.

Vernacular names : கன்னடப் பெயர்: கொடிபிக்கி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, உரோமங்களற்றது
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் பக்கவாட்டில் காணப்படுபவை, எளிதில் உதிரக்கூடியவை மற்றும் தழும்புகளை ஏற்படுத்தவல்லது; இலைக்காம்பு 3.5 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை_அலகு 8-11 X 3.8-4.8 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது அதன் முனை மூயூக்கரனேட், அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-14 ஜோடிகள், மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் கோரியம்போஸ்; மலர்கள் வெள்ளை நிறமானது; மலர்காம்பு 0.5 செ.மீ.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோளவடிவானது; விதைகள் 2-4.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 1800 மற்றும் 2400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- ஆனைமலை மற்றும் நீலகிரி.

சான்று ஏடு :

Blumea 21: 424. 1973; Gamble, Fl. Madras 1: 445. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 165. 2004.

Top of the Page