ஒரோபியா எரித்தோராகார்பா Bedd. - அனோனேசி

:

தமிழ் பெயர் : மிளாகாய்நாரி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : குத்துச் செடி அல்லது சிறு மரம், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் அடர்ந்த மென்மையான மெல்லிய உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.2-0.4 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது வளையமானது; இலை அலகு 6-12.5 X 2-5 செ.மீ., குறுகிய நீள்வட்டம் முதல் நீள்சதுரம், அலகின் நுனி அதிக்கூரியது மற்றும் முனை மழுங்கியது, அலகின் தளம் கூர்மையானது, சிலவற்றில் வட்ட வடிவமானது, அலகின் விளிம்பு முழுமையானது, புதிய இலைகள் இரண்டு பக்கங்களிலும் நீண்ட உரோமங்களுடையது, முதிர்ந்த இலைகள் கீழ்பரப்பில் மற்றும் நீண்ட உரோமங்களுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் மிக நெருக்கமானது, பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் 3-4 கொத்தாக காணப்படும்; இலைக்கோணங்களில் அமைந்தவை அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை, மலர்காம்பு 1-2 செ.மீ. நீளமானது உரோமங்களுடையது.
கனி / விதை : கொத்தான ஒரு விதையுள்ள முழுச்சதைகனி (பெர்ரி) நீள்வட்டம், சிகப்பு நிறம், பள்ளங்களுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 800 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது அரிதாக தெற்கு சயாத்திரி மற்றும் கூர்க் பகுதியில் காணப்படும்.

சான்று ஏடு :

Trans. Linn. Soc. Lond. 20: 5. 1846; Gamble, Fl. Madras 1: 24. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 19. 2004.

Top of the Page