மாஸ்டிக்சியா அர்போரியா (Wt.) Bedd. மிகசி. அர்போரியா - கார்னேசி

இணையான பெயர் : பர்சினோபெட்டாலம் அர்போரியம் Wt.

தமிழ் பெயர் : வெளிச்சீ

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது பட்டைத்துளைகள் (லெண்டிசெல்) உடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சற்று வளையம் போன்றது, உரோமங்களற்றது.
சாறு : பிசின் (ரெசின்) சுரக்ககூடியது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1-4 செ.மீ. நீளமானது, கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 6.5-16 X 2-10 செ.மீ., நீள்வட்டம் அல்லது தலைகீழ் முட்டை வடிவமானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அதன் முனை மழுங்கியது (கூரிய முனை 0.8-1.8 செ.மீ. நீளமுடையது), அலகின் தளம் ஆப்பு வடிவானது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது அல்லது உலரும் போது சிறிது பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், அலகின் மேற்பரப்பு பச்சையானது, கீழ்பரப்பு வெளிறிய நிறமானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-8 ஜோடிகள், நன்கு படிப்படியாக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் சற்று நெருக்கமாக இணையானவைகளாக இரண்டாம் நிலை நரம்புகளை இணைக்கின்றன (பெர்க்கரண்ட்).
மஞ்சரி / மலர்கள் : தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள் வகை மஞ்சரி.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட வடிவானது, 1.8-3.8 X 2 செ.மீ., கீரிடம் போன்ற புல்லி இதழ்கள் உதிர்ந்த தழும்புகளுடையது, ஓர் விதையுடையது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகின்றன - குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி காடுகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Beddome, Fl. Sylv. 216. 1872; Gamble, Fl. Madras 1: 573. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 208. 2004; Saldanha, Fl. Karnataka 2: 64. 1996.

Top of the Page