லிட்சியா ஒலியாய்டஸ் (Meisner) J.Hk. - லாரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 2-3.5 செ.மீ. நீளமானது, தடித்தது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 13.5-18 X 6-9.5 செ.மீ., நீள்வட்டம் முதல் நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது அல்லது மழுங்கியவை, அலகின் தளம் வட்டமானது-அட்டனுவேட் முதல் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), கோரியேசியஸ்; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8 ஜோடிகள், தெளிவற்று காணப்படும்; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது; மற்ற சிறு நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம் வகை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), அழுந்திய கோளவடிவானது, 2 செ.மீ. நீளமானது, சிறிய கோப்பை வடிவ தட்டையான ப்பீரியான்ந்த் மேல் அமைந்தவை; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில், கடல் மட்டத்திலிருந்து 400-1400 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Hooker, Fl.Brit.India 5: 175. 1886; Gamble, Fl. Madras 2: 1236. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 399. 2004.

Top of the Page