ஐசோநான்றா பேரோடிட்டியானா A. DC - சப்போட்டேசி

இணையான பெயர் : ஐசோநான்றா கேண்டொலியானா Wt.

Vernacular names : மலையாளப் பெயர்: கரிம்பலா, வாலுக்கன்னு

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது , ஒழுங்கற்ற பெரியவை பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, தடித்தவை, இளம்பருவத்தில் உரோமங்களுடையது.
சாறு : வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.7-1.5 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது கேனாலிகுலேட், இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 4-11 X 1.5-5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் மெட்டையானது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு அலை போன்றது மற்றும் பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், மெல்லிய கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 6-10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய இணையான நெருக்கமான பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் தொகுப்பாக காணப்படுபவை; மலர்கள் வெள்ளை நிறமானது, காம்பற்றது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), தலைகீழ் முட்டை வடிவானது; ஒர் விதையுடையது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய மற்றும் மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1300-2000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு பகுதிகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்-அகஸ்த்தியமலை, ஆனைமலை, பழனி மலைகள், நீலகிரி, வயநாடு மற்றும் கூர்க் பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

DC, Prodr. 8: 188. 1844; Gamble, Fl. Madras 2: 761. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 267. 2004; Saldanha, Fl. Karnataka 1: 328.1984; Cook, Fl. Bombay 2: 91.1908; Almeida, Fl. Maharashtra 3:166. 2001.

Top of the Page