ஹம்போல்டியா ஃபுருநானிஸ் Wall. - ஃபேபேசி-சிசல்பினிஆய்டியா

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறு மரம் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது; புதிய சிறிய நுனிக்கிளைகள், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோண விளிம்பு கொண்டது மற்றும் உரோமங்களுடையது.
இலைகள் : கூட்டிலைகள், இரட்டைபடை சிறகுவடிவக்கூட்டிலை (பேரிபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்), பல்வினேட்; ஒர் ஜோடி இலையடிச்செதில்களுடையது, ஈட்டி வடிவம் மற்றும் படர்ந்த கிட்னி வடிவ இலைபோன்ற செதில்; ரேக்கிஸ் 6 செ.மீ. நீளமானது, கோணவடிவானது, சிறிய இறகு போன்று அமைப்புடையது; சிற்றிலை 2 ஜோடிகள், மிகச்சிறிய காம்புடையது, இலை அலகு 8-26 X 2-8.3 செ.மீ. குறுகிய நீள்வட்டம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவம், அலகின் நுனி சிறிய வால் போன்ற அதிக்கூரியது மற்றும் சிறிது துருத்திய முனையுடையது (மூயூக்கரனேட்), அலகின் தளம் சமமற்றது, சப்கோரியேசியஸ் உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் சுமாராக 10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் அமைந்த ரெசீம்; மலர்கள் வெள்ளை நிறமான புல்லி இதழ் மற்றும் அல்லி இதழ் இளஞ்சிவப்பு நிறமானது.
கனி / விதை : பாட் கனி (அவரைப்போன்றது), 7 X 3 செ.மீ. நீளமானது, தட்டையானது, உலரும் போது திருகியது; விதைகள் தட்டையானது, உருண்டையானது.

காணப்படும் இடம் :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 200 மீ. - 800 மீ. உயரம் வரை உள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

தற்போதைய நிலை :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - மத்திய சயாத்திரி பகுதியில் உள்ள வயநாடு மற்றும் சிருங்கேரி இடைப்பட்ட பகுதியில் காணப்படும்.

சான்று ஏடு :

Pl. Asiat. Rar. 3: 17. 233. 1832; Gamble, Fl. Madras 1: 411. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 155. 2004; Saldanha, Fl. Karnataka 1: 390. 1996; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 171. 1990.

Top of the Page