English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | உயர்ந்த பெரிய மரம், தாங்கு வேர் (பட்ரஸ்டு) அமைப்புடன் 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை பிளவுகளுடையது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் சொரசொரப்பானதாகவும், தடித்தும், உரோமங்களற்றும் காணப்படும். |
| சாறு : | கறுப்பு நிறம். |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 1-2.5 செ.மீ. நீளமுடையது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது, ஒரு ஜோடி உதிரக்கூடிய ஸ்பர் இலைக்காம்பில் காணப்படும்; இலை அலகு 6.5 X 3.5 செ.மீ., தலைகீழ் ஈட்டி வடிவம் முதல் குறுகிய தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி வட்டமாகவும் அல்லது சில நேரங்களில் சிறிய பள்ளங்களுடையது (ஈமார்ஜினேட்), அலகின் தளம் ஆப்பு வடிவம் முதல் டெக்கரண்ட், காய்ந்த இலை அலகின் விளிம்பு முழுமையானது அல்லது உலரும் போது பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது, மையநரம்பு இலையின் பரப்பிற்கு சமதளமானது அல்லது பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-11 ஜோடிகள், மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் அமைப்பு கொண்டது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி தண்டின் நுனியில் அமைந்த பேனிக்கிள், அடர்ந்த ஊதா-அரக்கு மென்உரோமங்கள்; மலர்கள் இருபாலானவை; அல்லி வட்டம் முட்டை வடிவானது, அல்லி வட்டத்தின் உட்புறம் உரோமங்கள் காணப்படும். |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்டம் முதல் நீள்சதுர வடிவம், காய்ந்த கனிகளின் மேல் கோடுகள் காணப்படும். 3.8 செ.மீ., ஒரு விதையுள்ள கனி. |