கோம்ஃப்பான்றா டெட்ரான்றா (Wall.) Sleumer - இக்காசினேசி

இணையான பெயர் : கோம்ஃப்பான்றா பாலிமார்ஃபா Wt. ; லாசிஆன்ந்தரா டெட்ரான்றா Wall. ex Roxb.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 5. உயரம் வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.7-1.2 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது; இலை அலகு 8-15.5 X 1.5-6 செ.மீ., வடிவத்தில் வேறுபாடுடையது, நீள்சதுரம் முதல் நீள்வட்டம்-நீள்துர வடிவானது, அதிக்கூரியதுடன் முனை மழுங்கியது முதல் வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டம் போன்றது, அலகின் விளிம்பு முழுமையானது, ஜவ்வு போன்றது முதல் சார்ட்டேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-6 ஜோடிகள், விளிம்புகள் இணைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் வெள்ளை நிறமானவை, இலைக்கோணங்களில் சிறிய சைம் வகை மஞ்சரியில் காணப்படுபவை.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), உருளை-நீள்சதுர வடிவானது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக மிகக்குறைவான உயரமுடைய மலைகளிலுள்ள அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தோமலேசியா மற்றும் இந்தோசைனா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Notizbl. Bot. Gart. Berlin- Dahlem 15: 238. 1940 & Blumea 17: 204. 1969; Gamble, Fl. Madras 1: 195. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 93. 2004; Saldanha, Fl. Karnataka 2: 105. 1996.

Top of the Page