இயோனிமஸ் இண்டிகஸ் Heyne ex Roxb. - செலஸ்ட்ரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மிருதுவான பொரிந்த பட்டை, பட்டையை சுரண்டினால் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்; பட்டையின் உட்புறம் சிவப்பு நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சற்று வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.3-0.8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 5-11 X 2-4.3 செ.மீ., நீள்வட்டம் அல்லது குறுகிய நீள்வட்டம், அலகின் நுனி மழுங்கிய அதிக்கூரியது போன்று நீண்டது, சிலவற்றில் மழுங்கியதுடன் கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவமுடையது, அலகின் விளிம்பு முழுமையானது உரோமங்களற்றது, மேற்பரப்பு பளபளப்பானது, சார்ட்டேசியஸ் அல்லது சப்கோரியேசியஸ்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 4-5 ஜோடிகள், கீழ்பரப்பில் தெளிவற்றது; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : ஒன்று முதல் மூன்று மலர்கள் கொண்ட இலைக்கோணங்களில் அமைந்த சைம் மஞ்சரி; மலர்கள் சிவப்பு நிறமுடையது; இதழ்கள் பிம்பிரியேட்.
கனி / விதை : கேப்சூல், அறைகளுடையது, தலைகீழ் இதய வடிவமானது ஒவ்வொரு அறையிலும் 1-2 விதைகள் காணப்படும்.

வாழியல்வு :

பொதுவாக கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 200 மீ. முதல் 500 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகிறது (என்டமிக்) - பரவலாக மத்திய சாயாத்திரி பகுதியிலும் மற்றும் அரிதாக தெற்கு சாயாத்திரி பகுதியிலும் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Roxburgh, Fl. Ind. 2: 409. 1824; Gamble, Fl. Madras 1: 202. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 96. 2004; Saldanha, Fl. Karnataka 2: 95. 1996.

Top of the Page