எலையோகார்ப்பஸ் வெனஸ்டஸ் Bedd. - எலையேகார்ப்பேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 10 முதல் 15மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமுடையது, வெடிப்புகளுடையது; உள்பட்டையின் நிறம் ஆரஞ்சு நிறமுடையது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறுநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்ற அமைப்புடையது, இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 1-2 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது; இலை அலகு 6-12 X 3-5 செ.மீ., நீள்வட்டம் முதல் தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது முதல் மழுங்கியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு செரேட் (ரம்பம் போன்ற பற்களையுடையது), உரோமங்களற்றது, கோரியேசியஸ், இலையின் கீழ்பரப்பில் முதல் நிலை நரம்புகளின் கோணங்களில் சுரப்பிகள் காணப்படும்; இரண்டாம் நிலை நரம்புகள் 5 ஜோடிகள், கிளைத்தது, உரோமங்களற்ற டொமேஸ்சியாவை கோணங்களில் கொண்டவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம் மஞ்சரி, சிவப்பு நிறமுடையது, 4-7 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது; மலர்கள் வெண்மையானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), தலைகீழ் முட்டை வடிவம், ஏபிகுலேட், 4-5 X 2.5 செ.மீ. வழுவழுப்பானது, மின்னும் பச்சை நிறமுடையது; ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

அரிதாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. முதல் 1500 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே (என்டமிக்) காணப்படுகிறது - அகஸ்த்திய மலை மற்றும் வருசநாடு பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு சயாத்திரி பகுதிகளில் காணப்படுகிறது.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Beddome, Fl. Sylv. t. 174.1872; Gamble, Fl. Madras 1: 124. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 65. 2004.

Top of the Page