எலையோகார்ப்பஸ் க்கசோனை Weibel - எலையேகார்ப்பேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்ந்த உரோமங்களுடையது, மற்றும் இலைகள் உதிர்ந்ததால் உண்டாகும் தழும்பு காணப்படும்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்ற அமைப்பு, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.6-1.5 செ.மீ. நீளமானது, உரோமங்கள் அதிகமற்றது அல்லது உரோமங்களற்றது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 4-8 X 2.5-4 செ.மீ., பொதுவாக, தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது மற்றும் மழுங்கிய முனை அல்லது பள்ளமான நுனி, அலகின் தளம் ஆப்பு வடிவம், அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, உரோமங்களற்றது, சார்ட்டேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் 4-6 ஜோடிகள் மெலிதானது, நரம்புகள் கிளைத்தது, மற்றும் கீழ்பரப்பில் நரம்புகள் இணையும் இடத்தில் டொமேஸ்சியா காணப்படும்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம், உரோமங்களுடையது, 13-25 மலர்களுடையது; மலர்கள் வெள்ளை நிறமுடையது, மகரந்த பை தாடி போன்ற நீட்சியுடையது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), அகன்ற நீள்வட்டம், 2.5 செ.மீ. நீளமானது, ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக அதிக உயரம் கொண்ட பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - வருசநாடு, தெற்கு சாசயாத்திரி பகுதியில் காணப்படுகிறது.

தற்போதைய நிலை :

ஒர் முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது - அதன் மூலம் மட்டுமே அறியப்பட்டுள்ளது.

சான்று ஏடு :

Candollea 27: 17. 1972.

Top of the Page