எலையோகார்ப்பஸ் பிளாஸ்கோவை Weibel - எலையேகார்ப்பேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறுநுனிக்கிளைகளில் சிறிய சாம்பல் நிறமான மென்மையான உரோமங்களுடையது, மற்றும் இலைகள் விழுந்ததால் ஏற்படும் தழும்பு காணப்படும்
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 1.5-2.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; பரவலான உரோமங்களுடையது; இலை அலகு 6-9.5 X 3-4.5 செ.மீ., நீள்வட்டம் அல்லது நீள்வட்டம்-முட்டை வடிவம், அலகின் நுனி கூர்மையானது முதல் சிறிய வால் போன்று நீண்டு மழுங்கிய முனை உடையது, அலகின் தளம் வட்டமானது, அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சற்றே உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் தோராயமாக 7 ஜோடிகள், நரம்புகள் கிளைத்தது, கீழ்பரப்பில் நரம்புகள் சந்திக்கும் இடத்தின் டொமேஸ்சியா காணப்படும்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் கொண்ட பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம், 4-6 செ.மீ. நீளமானது, நுண்ணிய உரோமங்களுடையது, 6-7 மலர்கள் கொண்டது; மலர்கள் வெள்ளை நிறம், மலர்காம்பு 1-1.2 செ.மீ. நீளமானது, மகரந்த பை தாடி போன்ற நீட்சியுடையது, உரோமங்களற்றது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்டமானது, 1.5 செ.மீ. நீளமானது, ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - பியர் சோலை (2150 மீ.) பழனி மலை, தெற்கு சயாத்திரி.

தற்போதைய நிலை :

அழிந்திருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது (ஒர் முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது - அதன் மூலம் மட்டுமே அறியப்பட்டுள்ளது).

சான்று ஏடு :

Candollea 27: 16. 1972; Mathew, Fl. Palni Hills, South India Part 1. 46. 1999.

Top of the Page