ட்ரைபீட்டஸ் சப்செஸைலிஸ் (Kurz) Pax & Hoffm. - ஈபோர்பியேசி

இணையான பெயர் : சைக்ளோஸ்டிமான் சப்செஸைலிஸ் Kurz.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கற்ற வளையமானது; மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தவை; இலைக்காம்பு 0.5-0.9 செ.மீ., உரோமங்களற்றது; இலை அலகு 8-19 x 3.5-6 செ.மீ., நீள்சதுர முதல் நீள்வட்டமானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு இளம்பருவத்தில் கூர்மையான பற்களுடையது மற்றும் முதிர்ந்த இலையில் பிறை வடிவ பற்களுடையது, கோரியேசியஸ், பளபளப்பானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 7 ஜோடிகளுடையது, தெளிவானது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரியானது இலைக்கோணங்களில் அல்லது முதிர்ந்த கிளைகளில் தோன்றக்கூடியது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்).

வாழியல்வு :

அரிதாக அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600 மீ. வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி காடுகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Kurz.Engl., Pflanzenr. 4. 147. 25. 248. 1922; Cyclostemon subsessilis Kurz.Engl., Pflanzenr. 4. 147. 25. 248. 1922.; Ayyappan and Parthasarathy, Phytotaxonomy 1: 132. 2001.

Top of the Page