ட்ரைபீட்டஸ் ராக்ஸ்பர்க்கை (Wall.) Hurusawa - ஈபோர்பியேசி

இணையான பெயர் : புத்ரான்ஜிவா ராக்ஸ்பர்க்கை Wall.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 12 மீ. வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கரும்சாம்பல் நிறமானது மற்றும் கிடைமட்டமான லெண்டிசெல் கொண்டது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : கிளைகள் மெல்லியது, தொங்கியவை; சிறிய நுனிக்கிளைகள் கோணங்களுடையவை, குறுத்து நிலையில் உரோமங்களுடையவை.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் முக்கோண வடிவானவை, கூரியது,எளிதில் உதிரக்கூடியவை; இலைக்காம்பு 0.4-1 செ.மீ. நீளமானது; உரோமங்களற்றவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 5-9.5 x 1.5-3.5 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுர வடிவம் முதல் நீள்சதுர-முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் மழுங்கிய முனையுடன் அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், கரும்பச்சை நிறமானது மற்றும் பளபளப்பானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 9-12 ஜோடிகள், மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஆண்மலர்கள் இலைக்கோணங்களில் கூட்டமாக அமைந்தவை; பெண்மலர்கள் இலைக்கோணங்களில் தனித்து காணப்படும்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட வடிவானது, சூலக முடிச்சு நிரந்தரமாக கனியுடன் காணப்படும்; விதை ஒன்று கொண்டது.

வாழியல்வு :

குறைந்தளவு மழை பெறும் பசுமைமாறாக்காடுகள் மற்றும் பகுதி பசுமைமாறாக்காடுகள், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600 மீ. வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் குறிப்பாக குறைந்தளவு மழை பெறும் தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரி காடுகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

J. Fac. Sci. Univ. Tokyo, Sect. 3, Bot. 6: 337. 1954; Gamble, Fl. Madras 2: 1311. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 415. 2004; Saldanha, Fl. Karnataka 2: 131. 1996.

Top of the Page