English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் கோட்டு-ஈட்டி வடிவானது, 0.6 செ.மீ. நீளமானது, ஓர் ஜோடியுடையது, ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது; இலை அலகு 14-27 X 3-8.5 செ.மீ., நீள்சதுர வடிவானது, அலகின் நுனி நீண்ட அல்லது குட்டையான அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு பொதுவாக முழுமையானது, சப்கோரியேசியஸ், அலகின் பின்புறத்தில் அடர்த்தியான ப்ரவுன் நிறமான உரோமங்களுடைய மையநரம்பு கொண்டது, அலகின் மேற்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் மேற்பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-10 ஜோடிகளுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பை நோக்கிய வலைப்பின்னல்-பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை, இலைக்கோணங்கள் அல்லது முதிர்ந்த தண்டின் பக்கவாட்டில் கொத்தாக காணப்படுபவை. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோளவடிவானது, ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது, காம்புடையது. |