டையோஸ்பைரஸ் மொன்டானா Roxb. - எபனேசி

:

தமிழ் பெயர் : வக்கனை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : தண்டில் பொதுவாக முட்கள் காணப்படும்; மரத்தின் பட்டை பழுப்பு நிறமுடையது, பட்டை ஒழுங்கற்ற முறையில் உதிரக்கூடியது; உள்பட்டை மஞ்சள் நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் வளையமானது, மெலிதானது, இளங்கிளைகளில் உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.5-1.0 செ.மீ. வரை நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட் அல்லது பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 3-11 X 1.4-5 செ.மீ., பொதுவாக முட்டை வடிவம் - நீள்சதுர வடிவமுடையது, அலகின் நுனி கூரியது அல்லது மழுங்கியது, அலகின் தளம் சதுரமானது (ட்ரன்கேட்) முதல் சிறு இதய வடிவானது (சப்கார்டேட்) சிலவற்றில் வட்டமானது, சார்ட்டேசியஸ், புதிய இலைகளின் இருபரப்பிலும் மென்உரோமங்களுடையது; முதிர்ந்த இலைகள் உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் பரப்பிற்கு சமமானது அல்லது மேற்பரப்பில் சிறிதளவு பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : ஓர் பால் மலர்கள், ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் பச்சை நிறமுடையது, இலைக்கோணங்களில் காணப்படும் சைம்; பெண்மலர்கள் தனித்தவை, இலைக்கோண மொட்டுகளில் இருந்து தோன்றும்.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), உருண்டையானது, 2 செ.மீ. வரை குறுக்களவுடையது; விதைகள் பொதுவாக 4-8, சிலவற்றில் 2, கருப்பு கலந்த அரக்கு நிறம்.

வாழியல்வு :

குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. உயரம் உயரம் வரையான மலைகளிலுள்ள மழை குறைவாக பெறும் (மழை மறைவு) பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் வெப்பமண்டல ஆஸ்திரேலியா; மேற்கு தொடர்ச்சி முழுதும் காணப்படும்.

சான்று ஏடு :

Roxburgh, Pl. Cor. T. 48. 1795; Gamble, Fl. Madras 2: 776. 1997(re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 271. 2004; Singh, Monograph on Indian Diospyros L. (Persimmon, Ebony) Ebenaceae. 166. 2005. Saldanha, Fl. Karnataka 1: 339. 1996.

Top of the Page