டையோஸ்பைராஸ் எபனம் Koenig - எபனேசி

:

தமிழ் பெயர் : வெள்ளை தூவாரை, வெள்ளி தூவாரை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கருப்பு நிறமுடையது, வழுவழுப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.3-0.8 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது; இலை அலகு 5-13.5 X 1.5-4.5 செ.மீ., நீள்வட்டம் அல்லது நீள்சதுரம், அலகின் நுனி வால் போன்று நீண்டு மழுங்கிய முனை அல்லது பள்ளமானது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-8 ஜோடிகள், தளப்பகுதியில் உள்ள நரம்பு ஜோடிகள் நெருக்கமானவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : ஓர்பால் மலர்கள்; ஆண்மலர்கள் சிறிய காம்புகளுடன் மூன்று மலர்களை கொண்ட இலைக்கோணங்களில் காணப்படும் சைம் மஞ்சரி, கிரீம்; பெண்மலர்கள் சிறிய காம்புடையது, இலைக்கோணங்களில் காணப்படும், தனித்தவை, பூக்காம்பு 0.2 செ.மீ. நீளமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), உருண்டையானது அல்லது சிறிதளவு உருண்டையானது, 2 செ.மீ. வரை குறுக்களவு கொண்டது, ஏபிகுலேட், உதிராத வளரக்கூடிய வளைந்த புல்லி இதழ்களுடையது; பொதுவாக 4 விதைகளை கொண்டது, அரிதாக 2-8 விதைகள் காணப்படும்.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் காணப்படுகிறது; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு சாயாத்திரி மழை மறைவு பகுதிகளிலும் மற்றும் நீலகிரி பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Koenig, Physiogr. Salsk. Mag. 1: 176. 1781; Singh, Monograph on Indian Diospyros L. (Persimmon, Ebony) Ebenaceae. 89. 2005; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 270. 2004; Gamble, Fl. Madras 2: 775. 1997 (re. ed).

Top of the Page