English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மிக உயரமான மரங்கள், 35 மீ. உயரமுடையது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வெளிப்புறத்தில் மஞ்சள் நிறமானவை, நன்கு படகு போன்ற பிளவுகளுடையது; உள்பட்டை நார் போன்றது, சிவப்பு நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களுடையது. |
| சாறு : | சாறு நீரைப் போன்றது, உலரும் போது மஞ்சள் நிறமானது, குறைந்தளவே உண்டாகின்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.8-2.5 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 5-9 X 2-4 செ.மீ., நீள்வட்டம்-ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் பொதுவாக அட்டனுவேட், சிலசமயங்களில் கூரியது, கோரியேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுபவை, நெருக்கமான இணையானவை (பேரலல்), மத்திய நரம்பிற்கு கிடை மட்டமானது, தடித்த விளிம்பின் இறுதி வரை செல்பவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் வெள்ளை நிறமானவை, மணமுடையது, பேனிக்கிள். |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட வடிவானது, நுனி அலகுடையது, 3.7 செ.மீ. நீளமானது, ஒர் விதையுடையது. |