ஆர்ட்டோகார்ப்பஸ் கோமிஜிஆனஸ் Wall. ex Trecul மிகசி. சிலானிக்கஸ் Jarrett - மோரேசி

இணையான பெயர் : ஆர்ட்டோகார்ப்பஸ் லக்கோச்சா sensu Fischer non Roxb.

Vernacular names : தமிழ்ப் பெயர்: ஒட்டிபில்லாமலையாளப் பெயர்: ஆரம்புலி, சிமா, தீட்டிபுலவுகன்னடப் பெயர்: வுட்டாஹல்லி, வுண்டா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : இலையுதிர் மரம், 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, சிறிய செதில்களாக உதிருபவை, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சிறிய சாம்பல் நிறமான உரோமங்களுடையது.
சாறு : வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் சிறியவை, எளிதில் உதிரக்கூடியவை மற்றும் தழும்புகளை ஏற்படுத்தவல்லது; இலைக்காம்பு 1-3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சாம்பல் நிறமான உரோமங்களுடையது; இலை அலகு 10-30. 5 X 5.5-11 (-16) செ.மீ., நீள்சதுர வடிவானது முதல் நீள்சதுர-ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது அல்லது சதுர வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது (சிலசமயங்களில் இளம்பருவத்தில் ரம்ப பற்களுடையது), கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பில் மையநரம்புயை தவிர பிற பகுதிகள் உரோமங்களற்றது, கீழ்பரப்பு மெண்மையான சாம்பல் நிறமான உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10-14 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை ; மலர்கள் ஓர் பாலானவை; ஆண் மலர்கள் கோளவடிவான தலை வகை மஞ்சரியில் அமைந்தவை, மஞ்சரிக்காம்பு 1-1.8 செ.மீ. நீளமானது; பெண் மலர்கள் கோளவடிவான தலை வகை மஞ்சரியில் அமைந்தவை, ஆந்தோகார்ப் முழுவதும் முடியவை.
கனி / விதை : சின்கார்ப் (சொரோசிஸ்), 5 செ.மீ. குறுக்களவுடையது, கோளவடிவானது, கனியும் போது மஞ்சள் நிறமானவை ; விதைகள் எண்ணற்றவை.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக அல்லது எமர்ஜெண்ட் மரங்களாக (காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட மிக உயர்ந்த மரமாக), திரிந்த பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா சயாத்திரியிலும் காணப்படுபவை.

சான்று ஏடு :

J. Arnold Arbor. 41: 90. 1960; Gamble, Fl. Madras 3: 1369.1998 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 437. 2004; Saldanha, Fl. Karnataka 1: 110.1984; Cook, Fl. Bombay 2:657. 1902; Almeida, Fl. Maharashtra 4b:357.2003.

Top of the Page