English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம் 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | கூட்டிலை, இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, பின்னே ஒர் ஜோடி; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது; மத்தியகாம்பு 18-20 செ.மீ. நீளமானது, பல்வினேட் மற்றும் அதற்கு சற்று மேல் வட்டவடிவ காம்பற்ற சுரப்பிகள் மேற்புறத்தில் உடையது; பின்னே 7-12 செ.மீ. நீளமானது, சிற்றிலை ஜோடிகளின் நடுவே சுரப்பிகளுடையது ; சிற்றிலைக்காம்பு 0.4 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 2-3 ஜோடிகள், எதிரடுக்கமானவை, நுனியிலுள்ள சிற்றிலைகள் தளத்திலுள்ளவையைவிட பெரியது, 8-20.5 X 3-6 செ.மீ., முட்டை-ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது (முனை 1.5-2.5 செ.மீ. நீளமானது), அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, உலரும் போது பச்சை நிறமானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட் . |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள். |
| கனி / விதை : | பாட் கனி (அவரைப்போன்றது), திருகியது; விதைகள் 5, கருப்பு நிறமானது, நீள்வட்ட வடிவானது. |