English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை நுண்ணிய வெடிப்புகளுடையது, வெளிறிய ப்ரவுன் நிறமானது |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, சப்வர்டிசில்லேட்; இலைக்காம்பு தடித்தவை, 3.5 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 12-22 X 5.5-10 செ.மீ., பொதுவாக தலைகீழ் முட்டை வடிவானது, சிலசயங்களில் தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி மழுங்கியது, அல்லது கூரியதுடன் மழுங்கிய நுனியுடையது முதல் சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் குறுகிய ஆப்பு வடிவானது, அலகின் கீழ்பரப்பில் மற்றும் அலகின் மேற்புறத்திலுள்ள மையநரம்பும் உரோமங்களுடையது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 8 அல்லது 9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் கிட்டதட்ட விளிம்பை நோக்கிய கிடைமட்டமான பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஒர்பாலானவை, ஈரகம் கொண்டவை, கூட்டமாக பக்கவாட்டிலுள்ள கழலைகள் மேல் அமைந்தவை. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), விதை ஒன்றுடையது. |