English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய இலையுதிர் மரம் மற்றும் தாங்கு வேர் (பட்ரஸ்டு) கொண்டது, 40 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| இலைகள் : | கூட்டிலை, இருமுறை_கிளைத்த_சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்); பெரியது, சிலசமயங்களில் மூன்றுமுறை_கிளைத்த_சிறகுவடிவக்கூட்டிலை (2-3 பின்னேட்), இரட்டைபடை_சிறகுவடிவக்கூட்டிலை (பேரிபின்னேட்); இலையடிச்செதில் உதிரக்கூடியது; பின்னே 3-5 ஜோடிகள், ஒன்றொன்றும் 5-6 ஜோடி சிற்றிலைகளை கொண்டது; இலை அலகு 4-5X1.5-4.5 செ.மீ., ஈட்டி வடிவம், சிற்றலையின்_நுனி அதிக்கூரியது, அலகின்_தளம் அட்டனுவேட், சமமற்றது, அலகின்_விளிம்பு முழுமையானது, சிறுகன்றின் இலைகள் ரம்ப பற்களுடையது, மிகச்சிறிய காம்புடையது, உரோமங்களற்றது, சப்கோரியேசியஸ், மையநரம்பு மேற்பகுதியில் அலகின் பரப்பைவிட உயர்ந்து காணப்படும்; இரண்டாம்_நிலை_நரம்புகள் 8-12 ஜோடிகள்; மூன்றாம்_நிலை_நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி கொத்தான இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம்; மலர்கள் பச்சை நிறம், மகரந்த பைகள் சிவப்பு நிறமானது, மலர்காம்பு சிறியது. |
| கனி / விதை : | பாட் கனி (அவரைப்போன்றது), தட்டையானது லிகுலேட், வெடிக்கனி, இறகு கொண்டது; விதைகள் 5-10, தலைகீழ் முட்டை வடிவம், தளத்தில் சமமற்றது. |