ட்ரைகேலிசியா ஸ்பீரொகார்ப்பா (Dalz.) Gamble - ரூபியேசி

இணையான பெயர் : டைக்கொஸ்பர்மம் ஸ்பீரொகார்ப்பம் Dalz

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கற்ற_வளையமானது; மரத்தின் பட்டை வெள்ளை நிறமானது, வழுவழுப்பானது, முதிரும் போது வலைப்பின்னல் பிளவுகளுடையது; உள்பட்டை மஞ்சள் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது முதல் தட்டையானது, உரோமங்களற்றது; நுனியிலுள்ள மொட்டு மஞ்சள் நிற ரெசீன் சுரக்ககூடியது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் குறுகிய முக்கோணமானது, 0.7 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது; இலைக்காம்பு 0.6-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 10-13 X 4-7 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-முட்டை வடிவானது, அலகின் நுனி சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது அல்லது மெட்டையானது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 5-8 ஜோடிகள், உரோமங்களுடைய டொமேசியா நரம்புகளின் கோணங்களில் உடையது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் தொகுப்பாக காணப்படுபவை; மலர்கள் பாலிகோமொடையீசியஸ், சிறியவை, காம்பற்றது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோள வடிவமானது, 2 செ.மீ. நீளமானது; விதைகள் எண்ணற்றது, தட்டையானது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

திபகற்ப இந்தியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு, மத்திய மற்றும் தென்மகாராஷ்ட்ரா சாகாயத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Gamble, Fl. Madras 437. 1921; Gamble, Fl. Madras 2: 620. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 237. 2004; Almeida, Fl. Maharashtra 3:60. 2001; Cook, Fl. Bombay 1: 604.1903.

Top of the Page