English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை மெல்லியவை, வழுவழுப்பானது, வெளிறிய ப்ரவுன் நிறமானது; உள்பட்டை வெள்ளை நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது அல்லது சிறிது உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.7-1.1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை_அலகு 6-13 X 2.5-6 செ.மீ., நீள்வட்ட வடிவானது, நீள்வட்டம்-முட்டை வடிவானது, அலகின் நுனி சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது, அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, உலரும் போது பச்சை நிறமானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-8 ஜோடிகள், சீராக வளைந்தவை, நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, ரெசீம் வகை; மலர்கள் காம்பற்றது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), உருளை வடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, 2.5 X 1.2 செ.மீ., விதை 5-6 பள்ளங்களுடையது. |