ஸ்டர்குலியா கட்டேட்டா Roxb. - ஸ்டர்குலியேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: தோண்டி, காவ்லி, காவலம்.மலையாளப் பெயர்: காவலம், கிதோண்டி, பீ நாரி, பொட்டகாவலம், தோண்டி.கன்னடப் பெயர்: குதிரேகொணட்டே, காம்பிர்க்கே.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : இலையுதிர் மரம், 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது, முதிரும் போது பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மஞ்சள்-ப்ரவுன் நிற உரோமங்களுடையது மற்றும் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் வால் போன்றது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 2-5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மஞ்சள்-ப்ரவுன் நிற நட்சத்திர வடிவ உரோமங்களுடையது, காம்பின் இருமுனைகளும் உப்பியது; இலை அலகு 8-24 X 6.5-14 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது முதல் அகன்ற நீள்வட்ட வடிவானது அல்லது முட்டை வடிவானது, அலகின் நுனி குட்டையான அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது முதல் இதய வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் மேற்பரப்பு உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு நட்சத்திர வடிவ மஞ்சள்-ப்ரவுன் நிற உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; தளத்திலே 3_நரம்புகளை உடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் அல்லது இலைக்கோணங்களில் காணப்படுபவை, ரெசீம் வகை, அடர்த்தியாக மஞ்சள்-ப்ரவுன் நிற நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; மலர்கள் பாலிகேமஸ், வெள்ளை நிறமானது மற்றும் பிங்க் நிறமான புள்ளிகளுடையது; மலர்காம்பு 0.3 செ.மீ. நீளமானது.
கனி / விதை : பாலிக்கிள் 1-5, தடித்தவை, தலைகீழ் முட்டை வடிவானது, 7.6 செ.மீ. நீளமானது, சிவப்பு நிறமானது, நட்சத்திர வடிவ மஞ்சள்-ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது, உட்புறம் பிங்க் நிறமானது அல்லது சிவப்பு நிறமானது; விதைகள் எண்ணற்றது, முட்டை வடிவானது, கருப்பு நிறமானது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை மற்றும் பகுதி_பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

DC, Prodr. 1: 482. 1824; Gamble, Fl. Madras 1: 104. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 59. 2004.

Top of the Page