சாஜ்ரேயா லாரிஃபோலியா (Graham) Blatt. - அனோனேசி

இணையான பெயர் : குயடேரியா லாரிஃபோலியா Graham

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ஒழுங்கற்ற வெடிப்புகளுடையது, பளபளப்பான வெளிறிய அரக்கு நிறம்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.5-1.3 செ.மீ, தடித்தது; இலை அலகு 10-30 X 3-10 செ.மீ., குறுகிய நீள்சதுரம் முதல் குறுகிய நீள்வட்டம், அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது அல்லது முனை மழுங்கியது, அலகின் தளம் கூரியது, உரோமங்களற்றது, அலகின் விளிம்பு முழுமையானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-13 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் கிரீம் நிறம், தனியானது அல்லது கொத்தாக நீண்ட காம்புடன் முதிர்ந்த கிளைகளில் காணப்படும்.
கனி / விதை : கொத்தான முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, மிகச்சிறிய காம்புடையது, குறுக்களவு 4 செ.மீ. வரையுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 200 மீ. முதல் 600 மீ. உயரம் உள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் (என்டமிக்)- அரிதாக தெற்கு சயாத்திரியிலும் மற்றும் மிக அரிதாக வடக்கு மலநாடு அமைந்துள்ள மத்திய சயாத்திரி முதல் கொங்கன் கடற்கரை வரை காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

குறைந்த பாதிப்புக்குட்பட்டது: பாதிக்கும் தருவாயில் (த்ரட்டண்டு) உள்ளவை (ஐ.யூ.சி. எண்.., 2000).

சான்று ஏடு :

J. Bombay Nat. Hist. Soc. 34: 294. 1931; Gamble, Fl. Madras 1: 12. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 20. 2004; Saldanha, Fl. Karnataka 1: 49. 1984; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 33. 1990.

Top of the Page