(ப்)டிரோஸ்பர்மம் டைவர்சிபோலியம் Blume - ஸ்டர்குலியேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: வட்டபொலவு.மலையாளப் பெயர்: பாம்பரம், மலவுரம்.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன், வழுவழுப்பானது; உள்பட்டை சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : கிளைகள் நிலத்திற்கு இணையானவை; சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது மற்றும் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் பக்கவாட்டில் அமைந்தவை, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1.5 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது; இலை அலகு 11.5-18 (-25.5) X 8.5-13.5 (-17) செ.மீ., நீள்சதுர வடிவானது முதல் பாண்டுரேட் வடிவானது, இளம்பருவத்தில் வெவ்வேறு வடிவுடையது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் இதய வடிவானது, சதுர வடிவானது முதல் சமமற்றது (இளம்பருவத்தில் பெல்டேட்-அலகின் பின்புறத்தில் கிட்டதட்ட அதன் நடுவில் காம்பு கொண்டது), அலகின் மேற்பரப்பு உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு வெள்ளி நிற உரோமங்களுடையது, உலரும் போது ப்ரவுன் நிறமானது, கோரியேசியஸ்; தளத்திலே 5_நரம்புகளை உடையது அலகின் தளம்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-9 ஜோடிகள், அலகின் மேற்புறத்தில் பள்ளமானது, கீழ்பரப்பில் தடித்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் பெரியவை, தனித்தவை அல்லது 2-3 மலர்கள் தொகுப்பாகமைந்தவை, இலைக்கோணங்களில் காணப்படுபவை, வெள்ளை நிறமானது; சிறுபூவடிச்செதில் விளிம்புகளில் பிளவுகளுடையது; மலர்காம்பு 0.5 செ.மீ. நீளமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), தடித்தவை, 5-கோணங்களுடையது, 7.6 X 3.8 செ.மீ., உரோமங்களுடையது; விதைகள் தட்டையானது, ஒவ்வொரு அறையிலும் 8-11 விதைகளுடையது, அதன் ஒர் பக்கத்தில் இறகுடையது.

வாழியல்வு :

திரிந்த பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு, மத்திய மற்றும் தென்மகாராஷ்ட்ரா சாகாயத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Bijdr. 88. 1825; Gamble, Fl. Madras 1: 108. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 58. 2004.

Top of the Page