English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | மரம், 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வழுவழுப்பானது, செந்நிறம் கலந்த கருப்பு. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | பக்கக்கிளைகள் மென்சிறு உரோமங்களுடையது, பிறகு உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு சராசரியாக 0.5 செ.மீ, நீளமானது, இலை அலகு 15-26 X 6-8.5 செ.மீ., நீள்சதுரம் அல்லது நீள்வட்டம்-ஈட்டி வடிவம், அலகின் நுனி அதிக்கூரியது (முனை 3 செ.மீ. வரை நீளமானது), அலகின் தளம் வட்டம் அல்லது சதுரமானது, உரோமங்களற்றது; நரம்புகள் மேற்பரப்பில் பதிந்தது, இரண்டாம் நிலை நரம்புகள் 10-14 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் அமைப்பு கொண்டது. |
| மஞ்சரி / மலர்கள் : | சிறு கிளைகளில் தனித்த மலர்களாக மற்றும்/அல்லது 10 மலர்கள் கொண்ட தொகுப்பாக அமைந்தவை, தண்டின் கழலைகள் மீது காணப்படும் (மலர்காம்பு 4-5.5 செ.மீ. நீளமானது மற்றும் குறுக்குவெட்டில் 2-3 மி.மீ.). |
| கனி / விதை : | கொத்தான முழுச்சதைகனி (பெர்ரி), 7 கனி (பெர்ரி) வரை நீள்சதுரம்-முட்டை வடிவம், உரோமங்களற்றது, 3 X 2.5 செ.மீ., கனிக்காம்பு சராசரியாக 1.8 செ.மீ. நீளமானது; விதைகள் நீள்சதுர வடிவம். |