English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள், தாங்கு வேர்களுடையது (பட்ரஸ்டு), பெரும்பாலும் ஊன்றுகோல் வேர்களுடையது, 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பட்டை துளைகள் (லெண்டிசெல்) உடையது; உள்பட்டை பிங்க் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| சாறு : | பிசின் உடையது (ரெசின்), மிக குறைந்த அளவே உண்டாகின்றன. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 1.2 செ.மீ. நீளமுடையது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 10-29 X 3-9 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர வடிவானது முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது அல்லது சற்று அட்டனுவேட், தடித்த கோரியேசியஸ்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் எண்ணற்றது, மெலிந்தது, சிலசமயங்களில் அலகின் விளிம்புகளில் மூன்றாம் நிலை நரம்புகளுடன் இணைந்து ஒன்றுக்கொன்று வித்தியாசமற்று காணப்படும், இணையானவை மற்றும் மையநரம்பிற்கு கிடைமட்டத்திலுள்ளவை; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரிகள் தண்டின் நுனியில் காணப்படுபவை. |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சூல்), கோளவடிவானது, 4 செ.மீ. குறுக்களவுடையது, தழும்புகளுடையது, நுனியில் நீட்சி போன்ற அலகுடையது, உலரும் போது கருமை கலந்த ப்ரவுன் நிறமடைகிறது, ஓர் விதையுடையது. |