பாவட்டா இண்டிகா L. - ரூபியேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: பாவட்டைமலையாளப் பெயர்: காமட்டா, நொச்சி, பாவட்டைகன்னடப் பெயர்: பாவட்டெ

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம் 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது மற்றும் முதிரும் போது ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை பச்சை-கீரிம் நிறமானது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, முதிரும் போது வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் அகன்ற ஈட்டி வடிவானது, இலையடிச்செதில் காம்புகளுக்கிடையே (இண்ட்ராபீட்டியோலார்) உடையது, தண்டிற்க்கு உறைப்போன்றது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 0.6-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 8.5-16.5 × 2.6-5 செ.மீ., வெவ்வேறு வடிவுடையது, நீள்வட்ட வடிவானது அல்லது தலைகீழ் முட்டை வடிவானது அல்லது தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, இரண்டாம்_நிலை_நரம்புகளுக்கிடையே தொளிவான சுரப்பிகளுடையது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 6-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி கோரியம்போஸ் சைம் வகை மஞ்சரி, தண்டின் நுனியில் காணப்படும்; மலர்கள் வெள்ளை நிறமானது; மலர்காம்பு 0.7 செ.மீ. நீளமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), 2 பைரீன் உடையது; ஒவ்வொரு பைரீனிம் ஒர் விதையுடையது.

வாழியல்வு :

திரிந்த பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகளில் கீழ்மட்ட அடுக்கில் (அன்டர்ஸ்டோரி) காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Sp. Pl. 110. 1753; Gamble, Fl. Madras 2: 633. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 229. 2004; Cook, Fl. Bombay 1: 612.1903; Almeida, Fl. Maharashtra 3:51. 2001.

Top of the Page