English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள், தாங்கு_வேர்களுடையவை (பட்ரஸ்டு), 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வழுவழுப்பானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, முதிரும் போது ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு-ப்ரவுன் நிறமானது . |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் “ஆப்ரவில் மாதிரி” முறையில் கிளைக்கும்; சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, நுண்ணிய உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது. |
| சாறு : | வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் சிறியவை, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1.5-3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், நுண்ணிய இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 7-15 X 3-5 செ.மீ., நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி வால் போன்றது முதல் சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு அலை போன்றது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள், மெல்லியவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் வெள்ளை நிறமானது, இலைக்கோணங்களில் தொகுப்பாக அல்லது ஜோடியாக அமைந்தவை, மலர்காம்பு 1.5 செ.மீ. நீளமானது; புல்லி இதழ்கள் உரோமங்களுடையது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), குறுகிய நீள்வட்ட வடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது, 5 X 2 செ.மீ.; ஒர் விதையுடையது. |