English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | குத்துச் செடி அல்லது சிறு மரம், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் மற்றும் மொட்டுகள் உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.3-0.4 செ.மீ. நீளமானது, மெலிதானது, உரோமங்களற்றது; இலை அலகு 4-8 X 2-3.5 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுரம் அல்லது ஈட்டி வடிவம், அலகின் நுனி அதிக்கூரியதுடன் மழுங்கிய நுனியுடையது, அலகின் தளம் கூர்மையானது, முதல் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, மெலிதான கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8, மெலிதானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் பொதுவாக தனியாக காணப்படும்; இலைக்கோணங்களில் அமைந்தவை; மலர்காம்பு மெலிதானது 0.7-2.0 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது. |
| கனி / விதை : | கொத்தான 1-2 விதையுள்ள முழுச்சதைகனி (பெர்ரி), உருண்டையானது, அலகுடையது, உரோமங்களற்றது. |