ஆக்னா லான்சியோலேட்டா Spreng. - ஆக்னேசி

இணையான பெயர் : ஆக்னா வைட்டியானா Wall. ex Wt. & Arn.; ஆக்னா ஹைனியானா Wt. & Arn.

Vernacular names : தமிழ்ப் பெயர்: காதாரை, சிலிம்பிமலையாளப் பெயர்: சிலிம்பி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழவழப்பானது; உள்பட்டை சிவப்பு.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியவை மற்றும் தழும்புகளை ஏற்படுத்தவல்லது; இலைக்காம்பு 0.3 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 4.5-8 ´1.2-1.8 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது, நீள்வட்ட-ஈட்டி வடிவானது, அலகின் நுனி சீராக கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, சப்கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் மெல்லியது, வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தனித்தவை அல்லது ரெசீம் (2-3 மலர்கள்), இலைக்கோணங்களில் காணப்படுபவை அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை; மலர்காம்பு 2.5 செ.மீ. நீளமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 5-7 உள்ளோட்டுத்தசைகனிகள் கிண்ணத்தின் மேல் அமைந்தவை; ஒரு உள்ளோட்டுத்தசைகனி ஒரு விதையுள்ளது, நேரானது, நீள்சதுர வடிவானது.

காணப்படும் இடம் :

தென்தீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் -

சான்று ஏடு :

Syst. Veg. 2: 597. 1825; Gamble, Fl. Madras 1: 166.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 85. 2004; Saldanha, Fl. Karnataka 1: 189. 1984.

Top of the Page