English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள், 8 மீ. வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் உடையது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, லெண்டிசெல் உடையது, நுண்ணிய உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலைக்காம்பு 1.2-6 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், நுண்ணிய உரோமங்களுடையது; இலை அலகு 9-30 X 5-14 செ.மீ., அகன்ற முட்டை-நீள்சதுர வடிவானது முதல் நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டம் போன்றது, அட்டனுவேட் அல்லது சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ் (உயரம் குறைவான மலைகளில்) முதல் கோரியேசியஸ் மற்றும் தடித்த நரம்புகளுடையவை (மிக உயரமான மலைகளில் காணப்படுபவை), அலகின் மேற்புறம் கரும்பச்சை நிறமானது, கீழ்புறத்தில் வெளிறிய பச்சை நிறமானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-11 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் மஞ்சள் நிறமானவை, தண்டின் நுனியில் காணப்படும் சைம் வகை மஞ்சரி, துர்நாற்றமுடையது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), பர்புள் கலந்த சிவப்பு, வழுவழுப்பானது, நீள்சதுர வடிவானது, 1.5-1.8 செ.மீ.; விதை ஒன்றுடையது. |