மைக்ரோட்ரோபிஸ் ஸ்டாக்சி Gamble - செலஸ்ட்ரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 8 மீ. வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, பழுப்பு நிறமான ப்ரவுன்
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.7-1.3 செ.மீ. நீளமானது; இலை அலகு 7.5-15 X 2.5-6.5 செ.மீ., நீள்வட்டம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவம், அலகின் நுனி கூரியது, அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவம், அலகின் விளிம்பு பின்னோக்கி வளைந்தது, கோரியேசியஸ்; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் அடிப்பரப்பில் தெளிவானது, 9-11 ஜோடிகள், இணையானது மற்றும் விளிம்பை ஒட்டி வளைவானது; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் காம்பில்லாமல் கொத்தாக இலைக்கோணங்களில் காணப்படும்.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), நீள்சதுர வடிவானது, 1.5-2 செ.மீ. நீளமானது, ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 300 மீ. முதல் 1500 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதியில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Kew Bull. 1916: 132; Gamble, Fl. Madras 1: 206. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 97. 2004.

Top of the Page