மைக்கீலியா செம்பகா L. - மேக்னோலியேசி

:

தமிழ் பெயர் : செண்பகமரம்

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், தாங்கு வேர்களுடையவை (பட்ரஸ்டு), 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, லெண்டிசெல்லேட் உடையது; உள்பட்டை கிரீம் நிறமானது மற்றும் ஆரஞ்சு வண்ண புள்ளிகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, இலையடிச்செதில் உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது; தண்டின் நுனியிலுள்ள மொட்டுகளை மிக நுண்ணிய உரோமங்களுடைய ஈட்டி வடிவ செதில்கள் மூடியிருக்கும்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலைக்காம்பு 2 செ.மீ. நீளமானது, தடித்தது மற்றும் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 9.5-25 x 3.5-9 செ.மீ., நீள்வட்டம் முதல் நீள்வட்ட-ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது மற்றும் முனை திருகியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு சிறிது அலைப்போன்றது, அலகின் இருபுறங்களும் உரோமங்களற்றது, சார்ட்டேசியஸ், மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 12-16 ஜோடிகளுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தனித்தது, இலைக்கோணங்களில் காணப்படுவது, பெரியவை, மஞ்சள் நிறமானவை, நறுமணமுடையது.
கனி / விதை : பாலிக்கிள், சொரசொரப்பானது, 2-3 செ.மீ., நீளமானது, காம்புகளற்றவை, ஸ்பைக்கிலமைந்தவை, கனி பின்புறத்தில் வெடிக்கக்கூடியது; விதை ஒன்று, கருஞ்சிவப்பு நிறமானது.

வாழியல்வு :

குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கே மிக குறைந்த மற்றும் மிதமான உயரமுடைய பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 2400 மீ. உயரமுடைய மலைகளில் காணப்படுபவை, மேலும் இவை வளர்க்கப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் சைனா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Linnaeus, Sp. Pl. 536. 1753; Gamble, Fl. Madras 1: 9. 1997 (re. ed); Saldanha, Fl. Karnataka 1: 37. 1984; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 15. 2004.

Top of the Page