மெமிசிலான் அம்பல்லேட்டம் Burm.f. - மெலாஸ்டோமெட்டேசி

:

தமிழ் பெயர் : அல்லி, அஞ்சனை, காசை, காவா, காயா, குற-காயா, பண்டகாயா, பூங்கலி, சிறுகாசா

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய ப்ரவுன் நிறம், பிளவுகளுடையது, முதிர்ந்த பட்டை மெல்லிய பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை மஞ்சள் கலந்த ப்ரவுன் நிறம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்குமானவை; இலைகாம்பு 1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 1.8-8.5 X 0.8-3.8 செ.மீ., நீள்வட்டம் முதல் நீள்வட்ட-முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, சிலசமயங்களில் கூரியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட் போன்றது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது, உலரும் போது அலகு ப்ரவுன் நிறமடைகிறது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் மற்றும் மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி கொத்தானது, காம்புடையது மற்றும் அடர்த்தியான சைமோஸ் அம்பல், இலைக்கோணங்களில் அமைந்தவை அல்லது முதிர்ந்த கிளைகளில் பக்கவாட்டிலுள்ள கழலைகளில் அமைந்தவை; மலர்கள் நீல நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, மஞ்சள் நிறமானது, 0.5 செ.மீ. குறுக்களவுடையது, விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகள் வரை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா, மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Burm.f., Fl. Ind. 87: 1768; Gamble, Fl. Madras 1: 504. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 183. 2004; Saldanha, Fl. Karnataka 2: 40. 1996.

Top of the Page