மெமிசிலான் டால்பெட்டியானம் Brandis - மெலாஸ்டோமெட்டேசி

:

தமிழ் பெயர் : கங்கன்

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, நுண்ணிய பிளவுகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, குறுக்குமறுக்குமானவை; இலைகாம்பு 0.5-1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 5-10 X 1.8-5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, நீள்வட்ட-ஈட்டி வடிவானது, அலகின் நுனி குறுகிய அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, மெல்லிய கோரியேசியஸ், உலரும் போது ஆலிவ் பச்சை நிறம் அல்லது மஞ்சள் நிறமடைகிறது மற்றும் சுருங்கியவை (ரூக்கோஸ்); மையநரம்பு அலகின் மேற்பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் மற்றும் மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் நீல நிறமானது, இலைக்கோணங்களில் அல்லது பக்கவாட்டில் கொத்தாகமைந்தவை, மிகச்சிறிய காம்புடையவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), 0.8 செ.மீ. குறுக்களவுடையது, கனியும் பொழுது மஞ்சள் நிறமடைகிறது.

வாழியல்வு :

அதிகமாக கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுபவை - அதிகமாக மத்திய சயாத்திரி மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Talbot, Bombay List. ed. 2. Append. 1902 & Indian Trees 336. 1906; Gamble, Fl. Madras 1: 503. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 182. 2004; Saldanha, Fl. Karnataka 2: 40. 1996.

Top of the Page