English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | மிகச்சிறிய மரங்களாக 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் மெல்லியது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்காமானவை, குறுக்குமறுக்குமானவை, இலைக்காம்பு 0.3-0.4 செ.மீ.; இலை அலகு 3-8.7 X 0.8-4 செ.மீ., நீள்வட்டம் முதல் குறுகிய நீள்வட்டம் அல்லது தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மழுங்கியது அல்லது சிறு பிளவுடையது (ரெட்யுஸ்), அலகின் தளம் கூறியது முதல் சிறிது அட்டனுவேட் போன்றது, அலகின் விளிம்பு முழுமையானது, உலரும் போது பச்சை நிறமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் மற்றும் மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது. |
மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் வெளிறிய நீல நிறமானது, சிறு தொகுப்பானது, இலைக்கோணங்களில் அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை, சிறிய மஞ்சரி காம்புடையது. |
கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 0.2-0.3 செ.மீ., குறுக்களவுடையது, விதை ஒன்றுடையது. |