மீலியொஸ்மா சிம்பிலிசிபோலியா (Roxb.) Walp. மிகசி. சிம்பிலிசிபோலியா - சாபீயேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: செம்பாவு, கலாவிமலையாளப் பெயர்: கலாவி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது , பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை பர்புள்-சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, நுண்ணிய உரோமங்களுடையது அல்லது உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1.5-3.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், இளம்பருவத்தில் நுண்ணிய உரோமங்களுடையது அல்லது உரோமங்களற்றது, காம்பின் தளப்பகுதி உப்பியது; இலை அலகு 10-30 (50) X 3-10 (-18) செ.மீ., தலைகீழ் ஈட்டி வடிவானது முதல் குறுகிய தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி குட்டையான அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது-அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, இளம்பருவத்தில் சிலசமயங்களில் ஆங்காங்கே பற்களுடையது, சார்ட்டோசியஸ், இளம்பருவத்தில் உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது, உலரும் போது ப்ரவுன் நிறமானது; மையநரம்பு கிட்டதட்ட அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 14-18 ஜோடிகள், உரோமங்களுடைய டொமேசியா நரம்புகளின் கோணங்களில் உடையது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை அல்லது தளம் நோக்கிய வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் மற்றும் இலைக்கோணங்களில் காணப்படுபவை பேனிக்கிள் வகை மஞ்சரி, உரோமங்களுடையது; மலர்கள் காம்பற்றது; பூவடிச்செதில் அற்றது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோள வடிவமானது, 0.5 செ.மீ. குறுக்களவுடையது; ஒர் விதையுடையது, சுருக்கங்களுடையவை (ருக்கோஸ்).

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 300-1600 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் சைனா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Walp., Rep. 1: 423. 1842; Gamble, Fl. Madras 1: 256. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 110. 2004; Saldanha, Fl. Karnataka 1: 102. 1984.

Top of the Page