English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் அடர்ந்த நீண்ட உறுதியான உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்ந்த நீண்ட உரோமங்களுடையது, 0.3. முதல் 0.5 செ.மீ. நீளமானது; இலை அலகு 5-15 X 3-7 செ.மீ. நீள்வட்டம் முதல் குறுகிய முட்டை வடிவம், அலகின் நுனி அதிக்கூரியது மற்றும் மழுங்கிய முனை (முனை 0.8 முதல் 2.2 செ.மீ. நீளமானது), அலகின் தளம் கூரியது முதல் வட்ட வடிவானது, மேற்பரப்பு உரோமங்களற்றது, புதிய இலையின் விளிம்பு உரோமங்களுடையது, சார்ட்டேசியஸ் (தாளை போன்றது); மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது, நீண்ட உறுதியான உரோமங்களுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள், உறுதியானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் போன்றது. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் தனியானது, இலைக்கோணங்களில் அமைந்தவை, காம்பற்றது, மென்மையான கிரீம் நிறமான அடர்ந்த பின்னிய உரோமங்களுடையவை. |
| கனி / விதை : | கொத்தான சில விதையுள்ள முழுச்சதைகனி (பெர்ரி), மிகச்சிறிய காம்புடையது, டோருலோஸ், இளம்காய்கள் உரோமங்களுடையவை. |