லீயா இண்டிகா (Burm.f.) Merr. - லீயேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்து செடி அல்லது சிறிய மரங்கள் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மத்திய தண்டு ஒன்று முதல் எண்ணற்றவை, ஸ்டில்ட் வேர்களுடையவை.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையவை மிக நுண்ணிய உரோமங்களுடையவை அல்லது அற்றது.
இலைகள் : இலைகள் கூட்டிலைகள், இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலைகள் முதல் மூன்றுமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலைகள், மாற்றுடுக்கமானவை, சுழல் போல் அமைந்தவை; மத்தியகாம்பு (ராக்கிஸ்) 10-20 செ.மீ. நீளமானது; சிற்றலைகளின் காம்பு 0.5-2.5 செ.மீ. நீளமானது; இலையடிச்செதில் பர்புள் நிறமானது, உறை போன்றது. தலைகீழ் முட்டை-நீள்சதுர வடிவானது, உரோமங்களற்றது; சிற்றிலைகள் 6-21 X 3.5-7.5 செ.மீ., முட்டை முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது முதல் வால் போன்றது, அலகின் விளிம்பு நுனி நோக்கிய ரம்ப பற்கள் முதல் விளிம்பு நோக்கிய பற்களுடையது, உரோமங்களற்றது, சார்ட்டேசியஸ், உலரும் போது ப்ரவுன் நிறமடைகிறது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி கோரியம்ப் சைம்; புல்லி இதழ் பச்சை நிறமானது, அல்லி இதழ்கள் கிரீம் நிறமானது,
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), சிறிது அழுந்திய கோளவடிவானது, 0.7 செ.மீ. குறுக்களவுடையது, பர்புள்-கருப்பு நிறமானது; விதைகள் 4-6 கொண்டது.

வாழியல்வு :

அதிகமாக கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக இரண்டாம் நிலை மற்றும் திரிந்த பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா, இண்டோசைனா, ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் தீவுகள்; மேற்கு தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Philipp. J. Sci. 14. 245; Gamble, Fl. Madras 1: 240. 1997 (re. ed); Saldanha, Fl. Karnataka 2: 174. 1996; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 106. 2004.

Top of the Page