ஹோப்பியா கேனரென்சிஸ் Hole - டிப்டிரோகார்ப்பேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய அரக்கு நிறம், வெடிப்புகளுடையது; பட்டையின் உட்புறம் கிரீம் நிறமுடையது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறுநுனிக்கிளைகள், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்ற அமைப்பு கொண்டது; இலைக்காம்பு 1.5-2 செ.மீ., நீளமானது, உரோமங்களற்றது; இலை அலகு 10-17 X 2-9 செ.மீ. முட்டை-ஈட்டிவடிவம், அலகின் நுனி கூரியது, அலகின் தளம் வட்டமானது, சிலவற்றில் இலையின் பின்புறத்தில் காம்பு இணைந்தது (சப்பெல்டேட்), கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8 ஜோடிகள், டொமேஸ்சியா கீழ்பரப்பில் இரண்டாம் நிலை நரம்பு கோணங்களில் காணப்படும்; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமான பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள், உரோமங்களற்றது; மலர்களில் கிரீம் நிறம், இதழ்கள் திருகியது.
கனி / விதை : உலர்கனி (நட்) 1.2-1.5 செ.மீ. நீளமானது, முட்டை வடிவமுடையது; புல்லி இதழ்கள் நிரந்தரமானவை மற்றும் இரண்டு பெரிய புல்லி இதழ்களை கொண்டது; ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் கொண்ட மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - அதிகமாக குதிரமூக் அமைந்துள்ள சிக்மகளூர் பகுதியிலும், மத்திய சாயாத்திரி பகுதியிலும் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Ind. For. 44: 575. 1918; Gamble, Fl. Madras 3: 1867. 1997 (re. ed); Saldanha, Fl. Karnataka 1: 192. 1996.

Top of the Page