English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | பெரிய மரம், 35 மீ. உயரமுடையது. |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை மெலிதான வெடிப்புடையது மற்றும் நீர் கோர்த்தது போன்ற எழும்பிய அமைப்புடையது (புஸ்டுலார்). |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் “ஆப்ரவில் மாதிரி” முறையில் கிளைக்கும், சிறிய நுனிக்கிளைகள் தடிமனாகவும், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றும் காணப்படும். |
சாறு : | பால் போன்ற திரவம் பின் கருப்பு நிறத்துக்கு மாறிவிடும். |
இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 0.8-2.5 செ.மீ., நீளமுடையது மற்றும் அதனுடன் ஒரு ஜோடி ஸ்பர் உடையது (உரோமங்களற்றது மற்றும் சிலசமயம் உதிரக்கூடியது), குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 10-2 X 52.5-7.6 செ.மீ., தலைகீழ் ஈட்டி வடிவம் , அலகின் நுனி மழுங்கியது முதல் சிறிது அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவம் முதல் டெக்கரண்ட், அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு இலையின் மேற்பரப்பைவிட உயர்ந்து காணப்படும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் அமைப்பு கொண்டது. |
மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் அல்லது தண்டின் நுனியில் அமைந்த பேனிக்கிள், 12-24 செ.மீ. நீளம், தங்க-மஞ்சள் நிறமுடைய சிறு மென்உரோமங்களானது; மலர்கள் ஒர்பாலானவை-இருபாலானவை, வெளிறிய பச்சை நிறம். |
கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), சாய்ந்த முட்டை வடிவம், உரோமங்களற்றது, நுனிப்பகுதி வட்டமானது 3 செ.மீ. நீளம், பூத்தண்டு கிண்ணம் கனியை முழுவதும் மூடியிருக்கும்; ஒரு விதையுள்ள கனி. |