கோர்டொனியா அப்டுயுசா Wall. ex Wt. & Arn. - தீயேசி

இணையான பெயர் : கோர்டொனியா அப்டியுசிபோலியா Wt.

Vernacular names : மலையாளப் பெயர்: ஆதங்கி, காரிகோவா,காட்டுகாரானா, ஒலா.கன்னடப் பெயர்: நாகட்டா.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கிட்டதட்ட வளையமானது, நுண்ணிய உரோமங்களுடையது அல்லது உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.2-1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், நுண்ணிய உரோமங்களுடையது அல்லது உரோமங்களற்றது; இலை அலகு 5-10.5 X 1.5-7 செ.மீ., நீள்வட்ட முதல் நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி மெட்டையானது அல்லது கூரியது முதல் குட்டையான அதிக்கூரியதுடன் அதன் முனையில் சிறு_பிளவுடையது (ரெட்யூஸ்), அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, இளம்பருவத்தில் அலகின் கீழ்பரப்பில் மையநரம்பு உரோமங்களுடையது, கோரியேசியஸ், கரும்பச்சை நிறமானது மற்றும் அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, அலகின் கீழ்பரப்பு வெளிறியது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-14 ஜோடிகள், ஒன்றொடுன்று விளிம்பின் அருகில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் மற்றும் பிற நரம்புகள் கண்களுக்கு புலப்படாது அல்லது அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் பெரியவை, தனித்தவை, வெள்ளை நிறமானது, தண்டின் நுனியில் அல்லது தண்டின் நுனியிலுள்ள இலைக்கோணங்களில் அமைந்தவை; மலர்காம்பு 0.2-0.5 செ.மீ. நீளமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), அறைகள் இணையுமிடத்தில் வெடிக்க கூடியது, நீள்சதுர வடிவானது, தடித்தவை, 3 செ.மீ. நீளமானது, 5-அறைகளுடையது; விதைகள் எண்ணற்றது, அதன் ஒர் பக்கத்தில் வெள்ளை நிறமான இறகுடையது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய மற்றும் மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் விளிம்புகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800-1900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்-தெற்கு சயாத்திரி மற்றும் மத்திய சயாத்திரி (நீலகிரி, வயநாடு மற்றும் கூர்க்) பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Wight & Arn., Prodr. 87. 1834; Gamble, Fl. Madras 1: 79. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 43. 2004

Top of the Page